பிரதமர் அலுவலகம்

முன்னணி அறிவியல் நிறுவனங்களுடனான கலந்துரையாடல் பற்றிய பிரதமரின் சுட்டுரைகள்

Posted On: 08 JUL 2021 3:46PM by PIB Chennai

மத்திய நிதி பெறும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கழகங்களுடன் கலந்துரையாடியப்பின், இந்த கூட்டத்தில் நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரிவித்த விவரங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி, பகிர்ந்து கொண்டார்

பெங்களூரு ஐஐஎஸ்சி, மும்பை ஐஐடி, சென்னை ஐஐடி, கான்பூர் ஐஐடி பற்றி சுட்டுரையிலும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் வெளிட்ட சுட்டுரைகளில் கூறியதாவது:

முன்னணி ஐஐடிக்கள் மற்றும் பெங்களூரு ஐஐஎஸ்சி இயக்குனர்களுடன் சிறப்பான கலந்துரையாடல் நடந்தது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புத்தாக்கம் மற்றும் இளைஞர்கள் இடையே அறிவியலை பிரபலப்படுத்துவது உட்பட பல விஷயங்கள் குறித்து நாங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம்.

ரோபோடிக்ஸ் துறையில் முக்கிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள், கணிதம்/அறிவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி, கொவிட்-19 பணி குறித்த சுவாரஸ்ய விஷயங்களை பெங்களூரு ஐஐஎஸ்சி குழுவினர் பகிர்ந்து கொண்டனர். தற்சார்பு இந்தியா தொலைநோக்கில், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

நைட்ரஜன் உற்பத்தி கருவியை ஆக்ஸிஜன் உற்பத்தி கருவியாக மாற்றுவதில் உள்ள தொழில்நுட்பத்தில் மும்பை ஐஐடியின் விரிவான பணி, புற்றுநோயை குணப்படுத்த செல் சிகிச்சை, LASE புத்தாக்க திட்டம் தொடங்கியது, டிஜிட்டல் சுகாதாரத்தில் முதுநிலை படிப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் விவரங்களை அறிந்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்

தற்காலிக மருத்துவ கூடாரங்கள், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களை கண்டறிதல் போன்ற கொவிட் குறைப்பு முயற்சிகள், பல் இயல்  ஆராய்ச்சி, புரோகிராமிங் மற்றும் தரவு அறிவியலில் ஆன்லைன் பிஎஸ்சி படிப்புகள் பற்றி சென்னை ஐஐடி குழு பேசியது

எதிர்கால ஆராய்ச்சி மையமாக கான்பூர் ஐஐடி மாறியது, பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் புத்தாக்கம், காற்றின் தரத்தை கண்காணிப்பது, மின்னணு எரிபொருள் செலுத்துதல் மற்றும் பல விஷயங்களை பார்க்க பெருமிதமாக இருந்தது.

தொடக்க நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் ஆதரவு, தொழில் நிபுணர்களின்  மேம்பாடு, ஆகியவை நாட்டின் இளைஞர் சக்திக்கு மிகுந்த பயனளிக்கும்.

இந்த கூட்டத்தின் விவரங்களை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1733638

 

----(Release ID: 1733784) Visitor Counter : 185