ஆயுஷ்

ஏழாவது சர்வதேச யோகா தினம் 2021 அன்று எம்-யோகா செயலியை பிரதமர் அறிமுகப்படுத்தினார்


சர்வதேச சுகாதார அமைப்புடன் இணைந்து இந்திய அரசு எம்-யோகா கைப்பேசி செயலியை உருவாக்கியுள்ளது

Posted On: 21 JUN 2021 4:46PM by PIB Chennai

ஏழாவது சர்வதேச யோகா தின விழாவில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, ‘சர்வதேச சுகாதார அமைப்பு எம்-யோகாசெயலியை அறிமுகப்படுத்தினார். பொது யோகா செயல்முறையின் அடிப்படையிலான பல்வேறு யோகா பயிற்சிகள் மற்றும் செய்முறைகள் குறித்த காணொலிகளை பல மொழிகளில் இந்த செயலி வழங்கும்.

நவீன தொழில்நுடபத்துடன் பண்டைய அறிவியலை இணைப்பதற்கான சிறந்த உதாரணம் இது என்று வர்ணித்த பிரதமர், யோகா குறித்த விழிப்புணர்வை உலகெங்கிலும் பரப்ப எம்-யோகா செயலி உதவும் என்றும், ‘ஒரே உலகம், ஒரே சுகாதாரம்முயற்சிகளுக்கு பங்காற்றும் என்றும் தெரிவித்தார்.

யோக அறிவியலை ஒட்டுமொத்த உலகத்திற்கும் கிடைக்க செய்யவே ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தினத்தை இந்தியா முன்மொழிந்தது. இன்றைக்கு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சுகாதார அமைப்புடன் இணைந்து மற்றுமொரு முக்கிய நடவடிக்கையை இந்தியா எடுத்துள்ளது.

எம்-யோகா செயலியின் சக்தியை உலகம் தற்போது உணரப்போகிறதுபொது யோகா செயல்முறையின் அடிப்படையிலான பல்வேறு யோகா பயிற்சி காணொலிகளை உலகின் பல மொழிகளில் இந்த செயலி வழங்கும். நவீன தொழில்நுட்பத்துடன் பண்டைய அறிவியலை இணைப்பதற்கான சிறந்த உதாரணம் இதுவாகும். யோகாவை உலகெங்கிலும் விரிவுபடுத்தவும், ‘ஒரே உலகம், ஒரே சுகாதாரம்முயற்சிகளின் வெற்றிக்கும் எம்-யோகா செயலி முக்கிய பங்காற்றும்,” என்று பிரதமர் தெரிவித்தார்.

குறிப்பாக தற்போதைய பெருந்தொற்றின் போது யோகா மற்றும் நல்வாழ்வை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்ல இந்த கைப்பேசி செயலி மிகவும் உதவிகரமாக இருக்கும். கொவிட்-19-ல் இருந்து குணமடைந்த நோயாளிகளின் மறுவாழ்விலும் இது முக்கிய பங்காற்றும் என்று பிரதமர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729072

---


(Release ID: 1729155) Visitor Counter : 271