மத்திய அமைச்சரவை

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறைச் செயலாளர் டாக்டர் குருபிரசாத் மொகாபத்ராவின் மறைவிற்கு மத்திய அமைச்சரவைச் செயலாளர் இரங்கல்

प्रविष्टि तिथि: 19 JUN 2021 11:07AM by PIB Chennai

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையின் செயலாளர் டாக்டர் குருபிரசாத் மொகாபத்ராவின் மறைவிற்கு மத்திய அமைச்சரவைச் செயலாளர் திரு ராஜீவ் கௌபா தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

அன்பான சக நண்பராகவும், கேந்திர சிந்தனை மற்றும் தலைமைப் பண்பு ஆகிய சிறப்பான தகுதிகளுடன் தலைசிறந்த பொது சேவகராக டாக்டர் மொகாபத்ரா விளங்கினார்.

அதிகாரமளிக்கப்பட்ட குழுக்களுள் ஒன்றின் தலைவராக, கொவிட்-19 தொற்றுக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தில் மிகுந்த அர்ப்பணிப்பை அவர் வெளிப்படுத்தினார்.

அவருக்குப் பெருந்தொற்று உறுதியாகி, உடல் நலன் குன்றியிருந்த போதும், பல்வேறு சவாலான தருணங்களைப் பொருட்படுத்தாது நாடு முழுவதும் பிராணவாயு விநியோகத்தைக் கண்காணித்து, நீண்ட நேரம் அவர் தொடர்ந்து பணியாற்றினார்.

அவரது ஆக்கபூர்வமான அணுகுமுறை மற்றும் பொது சேவையில் உறுதித்தன்மைக்காக அவர் என்றும் நினைவுக் கூரப்படுவார். அவரது திடீர் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728452

*****************


(रिलीज़ आईडी: 1728531) आगंतुक पटल : 190
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam