பிரதமர் அலுவலகம்
புகழ்பெற்ற தடகள வீரர் திரு மில்கா சிங்கின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
19 JUN 2021 8:16AM by PIB Chennai
பிரபல தடகள வீரர் திரு மில்கா சிங் அவர்களின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பூர்த்தி செய்து எண்ணிலடங்காத இந்தியர்களின் மனதில் சிறப்பான இடம் பிடித்த மாபெரும் விளையாட்டு வீரர் என்று அவரை திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது:
“திரு மில்கா சிங் அவர்களின் மறைவினால், நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பூர்த்தி செய்து எண்ணிலடங்காத இந்தியர்களின் மனதில் சிறப்பான இடம் பிடித்த மாபெரும் விளையாட்டு வீரரை நாம் இழந்துள்ளோம். அனைவருக்கும் ஊக்கமளிக்கும் அவரது ஆளுமை, லட்சக் கணக்கானவர்கள் அவர்மீது அன்பு செலுத்தக் காரணியாக இருந்தது. அவரது மறைவினால் மிகுந்த துயரமடைந்தேன்.
சில நாட்களுக்கு முன்புதான் திரு மில்கா சிங் அவர்களுடன் நான் பேசினேன். அதுதான் எங்களது இறுதி கலந்துரையாடல் என்பதை நான் அப்போது அறியவில்லை. ஏராளமான வளர்ந்து வரும் தடகள வீரர்களுக்கு அவரது வாழ்க்கைப் பயணம் ஆற்றலைத் தரும். அன்னாரது குடும்பத்தினர் மற்றும் உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களுக்கு எனது இரங்கல்கள்.”
*****************
(रिलीज़ आईडी: 1728526)
आगंतुक पटल : 207
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam