ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

மியூகோமைகோசிஸ் சிகிச்சைக்கு லிபோசோமல் ஆம்போடெரிசின் பி மருந்தின் இருப்பு போதிய அளவுக்குமேல் இருக்கும்: திரு மன்சுக் மாண்டவியா தகவல்

Posted On: 18 JUN 2021 2:16PM by PIB Chennai

கருப்பு பூஞ்சை என்றழைக்கப்படும் மியூகோமைகோசிஸ் சிகிச்சைக்கு பயன்படும் லிபோசோமல் ஆம்போடெரிசின் பி மருந்தின் இருப்பு போதிய அளவுக்குமேல் வைக்கப்படும் என மத்திய ரசாயண மற்றும் உரத்துறை இணையமைச்சர்  திரு மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

நாட்டில் மியூகோமைகோசிஸ் பாதிப்பு கடந்த 16ம் தேதி நிலவரப்படி 27,142. எதிர்காலத்தில், கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகரித்தால், ஆம்போடெரிசின் பி மருந்தை போதிய அளவுக்கு மேல் இருப்பு வைக்க இந்தியா தயாராக உள்ளது. இதன் உள்நாட்டு உற்பத்தியை 5 மடங்குக்கு மேல் இந்தியா அதிகரித்துள்ளது.

லிபோசோமல் ஆம்போடெரிசின் பி மருந்தின் உள்நாட்டு உற்பத்தி கடந்த ஏப்ரல் மாதம் 62,000 குப்பிகளாக இருந்தன. இந்த ஜூன் மாதத்தில் இதன் உற்பத்தி 3.75 லட்சம் குப்பிகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்ததோடு, 9,05,000 லிபோசோமல் ஆம்போடெரிசின் பி குப்பிகளை இறக்குமதி செய்யவும் இந்தியா ஆர்டர் கொடுத்துள்ளது.

இவ்வாறு மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

கடந்த மே 11ம் தேதி முதல், ஜூன் 17ம் தேதி வரை, 7,28,045 லிபோசோமல் ஆம்போடெரிசின் பி குப்பிகள் அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய மருத்துவமனைகளுக்கு மருந்துகள் துறை ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்துக்கு 25,260 குப்பிகளும், புதுச்சேரிக்கு  460 குப்பிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்கான ஒதுக்கீடுகளை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம்.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728153

*****************



(Release ID: 1728211) Visitor Counter : 238