பிரதமர் அலுவலகம்

குஜராத் சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்: பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணைத் தொகை அறிவித்தார்

प्रविष्टि तिथि: 16 JUN 2021 2:11PM by PIB Chennai

குஜராத்தில் ஆனந்த் மாவட்டத்தில்  நிகழ்ந்த சாலைவிபத்து காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு  நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சுட்டுரையில் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்தியில்,

‘‘குஜராத் ஆனந்த் மாவட்டத்தில் சாலை விபத்து காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளால் வருத்தம் அடைந்தேன். குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும்: பிரதமர் நரேந்திரமோடி’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

------


(रिलीज़ आईडी: 1727540) आगंतुक पटल : 215
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam