சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
70 நாட்களுக்குப்பின், நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது
Posted On:
16 JUN 2021 10:52AM by PIB Chennai
நாட்டில் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து குறைகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 62,224 பேருக்கு மட்டுமே புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 9 நாட்களாகவே, தினசரி கொவிட் பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் குறைவாக இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட கூட்டு முயற்சிகளால் கொவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.
நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நாட்டில் இன்று கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 8,65,432. 70 நாட்களுக்குப்பிறகு, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் 47,946 குறைந்துள்ளது. நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் அளவு, மொத்த பாதிப்பில் 2.92 சதவீதமாக உள்ளது.
கொவிட் பாதிப்பில் இருந்து தினசரி குணமடைபவர்கள் எண்ணிக்கை, கடந்த 34 நாட்களாக, தினசரி பாதிப்பு எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,07,628 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி பாதிப்பை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 45,404 அதிகம்.
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,83,88,100-ஆக உயர்ந்துள்ளது. இதன் சதவீதம் 95.80.
கடந்த 24 மணி நேரத்தில் 19,30,987 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 38,33,06,971 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் கொவிட் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணி வரையிலான தரவுகளின்படி, 36,17,099 அமர்வுகள் மூலம் 26,19,72,014 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், 28,00,458 தடுப்பூசிகள் போடப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727437
***
(Release ID: 1727507)
Visitor Counter : 205
Read this release in:
Marathi
,
Telugu
,
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada