பிரதமர் அலுவலகம்
இளைஞர்கள் தங்கள் எழுத்துத் திறனைப் பயன்படுத்தவும், இந்தியாவின் அறிவுசார் சொற்பொழிவுக்கு பங்களிக்கவும் பிரதமர் அழைப்பு
प्रविष्टि तिथि:
08 JUN 2021 8:30PM by PIB Chennai
இளைஞர்களுக்கான ‘யுவா’ திட்டம் பற்றி அறிந்து கொள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார் : இது இளம் எழுத்தாளர்களை வழிநடத்துவதற்கான பிரதமரின் திட்டம், எதிர்காலத்தில் தலைமை பொறுப்பேற்கவிற்கும் இளைஞர்களை வளர்க்கும் தேசிய திட்டம்.
இது குறித்து சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில்,
‘‘ தங்கள் எழுத்து திறனை பயன்படுத்தவும், இந்தியாவின் அறிவுசார் சொற்பொழிவுக்கு பங்களிப்பை அளிக்கவும் இளைஞர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான வாய்ப்பு இங்கே... https://innovateindia.mygov.in/yuva/” என கூறியுள்ளார்.
இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் மற்றும் எதிர்கால தலைமை பொறுப்புக்கு இளைஞர்களை வளர்ப்பதற்கான கற்கும் சூழலை உருவாக்குவதையும் தேசிய கல்விக் கொள்கை 2020 வலியுறுத்துகிறது.
இந்த இலக்கை வளர்க்கும், இந்தியாவின் 75 ஆண்டுகள் சுதந்திரத்தை நினைவுக் கூறும், தேசிய திட்டம் யுவா: நாளைய தலைவர்களின் அடித்தளத்தை உருவாக்குவதில் இளைஞர்களை வழிநடத்தும், பிரதமரின் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
சுதந்திரம் அடைந்து 75 வது ஆண்டை நோக்கி நாடு செல்லும் நிலையில், இந்திய இலக்கியத்தின் நவீன தூதர்களை வளர்க்க இந்த திட்டம் அவசியமாக கருதப்படுகிறது. புத்தகம் வெளியிடுவதில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. உள்நாட்டு இலக்கிய புதையல் களஞ்சியத்தை மேலும் ஊக்குவிக்க, இதை உலக அரங்கில் கொண்டு செல்வது அவசியம்.
-----
(रिलीज़ आईडी: 1725640)
आगंतुक पटल : 209
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam