சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வரைவு அறிவிப்பு : பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்களுக்கு (BOV) பதிவுச் சான்றிதழை பெறுவதற்கும், புதுப்பிப்பதற்குமான கட்டண விலக்கு அளிக்க முன்மொழிவு

Posted On: 01 JUN 2021 10:45AM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் 2021 மே 27 தேதியிட்ட வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்களுக்கு (BOV) பதிவுச் சான்றிதழைப் (ஆர்.சி) பெறுவதற்கும், புதுப்பிப்பதற்கும், புதிய பதிவு அடையாளத்தை ஒதுக்குவதற்குமான கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கும் உத்தேசத்துடன் மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ஐத் திருத்துவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மின் இயக்கத்தை ஊக்குவிக்க இது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிவிப்பை வெளியிட்ட நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள் பொது மக்களிடமிருந்தும் மற்றும் அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும் கருத்துகள் கோரப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723321

***(Release ID: 1723377) Visitor Counter : 233