சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நாளொன்றில் 21.23 லட்சம் கொவிட் பரிசோதனைகளை மேற்கொண்டு இந்தியா புதிய சாதனை

Posted On: 23 MAY 2021 11:25AM by PIB Chennai

கொவிட் பரிசோதனையின் எண்ணிக்கையில் இந்தியா மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.  ஒரே நாளில் மிக அதிகமாக கடந்த 24 மணி நேரத்தில் 21.23 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், தொடர்ந்து ஐந்தாவது நாளாக 20 லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 21,23,782 பரிசோதனைகள் நம் நாட்டில் மேற்கொள்ளப்பட்டன.

அன்றாட தொற்று உறுதி வீதம் 11.34%ஆக சரிந்துள்ளது.

மற்றொரு நேர்மறை வளர்ச்சியாக, 7-வது நாளாக, தினசரி புதிய பாதிப்புகள், மூன்று லட்சத்திற்கும் குறைவாக ஏற்பட்டுள்ள.

கடந்த 24 மணி நேரத்தில் 2,40,842 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் பதிவான அன்றாட பாதிப்புகளில் இது மிகக் குறைந்த எண்ணிக்கை ஆகும்.

தொடர்ந்து 9-வது நாளாக, அன்றாட புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,55,102 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

 

இதன் மூலம் நம் நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,34,25,467 ஆக இன்று பதிவாகியுள்ளது. தொற்றிலிருந்து குணமடைபவர்களின் தேசிய வீதம் 88.30% ஐ எட்டியுள்ளது.

கொவிட் தொற்றுக்கு இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 28,05,399 ஆக இன்று குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் 1,18,001 சரிந்துள்ளது.

நாட்டில் இதுவரை ஏற்பட்ட மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுவோர் 10.57% ஆகும்.

தேசிய உயிரிழப்பு வீதம் தற்போது 1.13 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3,741 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.

மாபெரும் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள மொத்த கொவிட்  தடுப்பூசியின் எண்ணிக்கை 19.50 கோடியாக பதிவாகியுள்ளது.

இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட அறிக்கையின்படி இதுவரை மொத்தம் 28,00,808 முகாம்களில் 19,50,04,184 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721015

-----



(Release ID: 1721041) Visitor Counter : 234