பிரதமர் அலுவலகம்

திரு சுந்தர்லால் பகுணாவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 21 MAY 2021 1:56PM by PIB Chennai

பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் திரு சுந்தர்லால் பகுணாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர், சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில் " திரு சுந்தர்லால் பகுணா அவர்களின் மறைவு நமது தேசத்திற்கு பெரிய இழப்பு. இயற்கையோடு இணக்கமாக வாழும், பல நூற்றாண்டுகள் பழமையான நெறிமுறைகளை, அவர் பின்பற்றினார். அவருடைய எளிமையையும், கருணை உணர்வையையும் ஒருபோதும் மறக்கவியலாது. எனது எண்ணங்கள், அவரது குடும்பத்தினருடனும், அபிமானிகளுடனும் துணையாக இருக்கின்றன. ஓம் சாந்தி"  என்று கூறியுள்ளார்.

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1720636) வருகையாளர் எண்ணிக்கை : 179