பிரதமர் அலுவலகம்

டைம்ஸ் குழும தலைவர் திருமதி இந்து ஜெயின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAY 2021 11:06PM by PIB Chennai

டைம்ஸ் குழும தலைவர் திருமதி இந்து ஜெயின் மறைவுக்கு பிரதமர்  திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

சுட்டுரையில் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:

‘‘ டைம்ஸ் குழும தலைவர் திருமதி இந்து ஜெயின் மறைவால் வருத்தம் அடைந்தேன். சமூக சேவை பணிகள், இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் நமது கலாச்சாரத்தில்  அவருக்கு இருந்த  ஆர்வம் ஆகியவற்றுக்காக அவர் எப்போதும் நினைவு கூறப்படுவார். அவருடன் நான் பேசியதை, நினைத்து பார்க்கிறேன். அவரது குடும்பத்துக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி.’’

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1718580) வருகையாளர் எண்ணிக்கை : 188