சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாட்டில் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 9.43 கோடியை கடந்தது: 24 மணி நேரத்தில் 36 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன
प्रविष्टि तिथि:
09 APR 2021 12:07PM by PIB Chennai
நாட்டில் போடப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை இன்று 9.43 கோடியை கடந்தது.
இன்று காலை 7 மணி வரை, 9,43,34,262 தடுப்பூசிகள் போடப்பட்டன.
கடந்த 24 மணி நேரத்தில் 36 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன.
83 ஆம் நாளான நேற்று, 36,91,511 தடுப்பூசிகள் போடப்பட்டன.
இந்தியாவில் போடப்படும் கொவிட் தடுப்பூசிகளின் தினசரி சராசரி 37,94,328 டோஸ்களாக உள்ளதால், உலகளவில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
இந்தியாவில் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,31,968 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களில் தினசரி கொவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 56,286 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9,79,608-ஐ எட்டியுள்ளது.
நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,19,13,292- ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 61,899 பேர் குணமடைந்துள்ளனர். 780 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1710596
*****************
(रिलीज़ आईडी: 1710678)
आगंतुक पटल : 289
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Malayalam