சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

9 கோடி தடுப்பு மருந்துகள் இதுவரை இந்தியாவில் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 லட்சம் டோஸ்கள்

Posted On: 08 APR 2021 11:29AM by PIB Chennai

உலகளாவிய பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் ஒருங்கிணைந்த போரில் இன்னுமொரு முக்கிய மைல்கல்லாக, இதுவரை வழங்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளின் எண்ணிக்கை இன்று 9 கோடியை கடந்தது.

இந்த வருடம் ஜனவரி மாதம் 16-ம் தேதியன்று தொடங்கப்பட்ட உலகின் மாபெரும்  தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று காலை 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, 13,77,304 அமர்வுகளில் 9,01,98,673 தடுப்பு மருந்து டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 89,68,151 சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முதல் டோஸ் மற்றும் 54,18,084 சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டாம் டோஸ், 97,67,538 முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முதல் டோஸ், 44,11,609 முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டாம் டோஸ், 60 வயதுக்கு மேற்பட்ட 3,63,32,851 பயனாளிகளுக்கு முதல் டோஸ், 60 வயதுக்கு மேற்பட்ட 11,39,291 பயனாளிகளுக்கு இரண்டாம் டோஸ், 45 வயதுக்கு மேற்பட்ட 2,36,94,487 பயனாளிகளுக்கு முதல் டோஸ் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட 4,66,662  பயனாளிகளுக்கு இரண்டாம் டோஸ் அடங்கும்.

நாட்டில் இதுவரை வழங்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளில் 60 சதவீதம் 8 மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையில் 82-ம் நாளன்று (2021 ஏப்ரல் 7) 29,79,292 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் 38,760 பேருக்கு முதல் டோஸூம், 2,89,261 பேருக்கு இரண்டாம்  டோஸும் போடப்பட்டது.

சர்வதேச அளவில் தினமும் போடப்படும் தடுப்பூசிகளின் சராசரி விகிதத்தின் படி ஒரு நாளைக்கு 34,30,502 தடுப்பூசிகள் என்ற அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இதற்கிடையே, கடந்த 24 மணி நேரத்தில் 1,26,789 புதிய பதிப்புகள் இந்தியாவில் உறுதி செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், தில்லி, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, குஜராத், கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களில் கொவிட் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. புதிய பாதிப்புகளில் 84.21% மேற்கண்ட மாநிலங்களில் இருந்து பதிவாகியுள்ளன.

மகாராஷ்டிராவில் 59,907 பாதிப்புகளும், சத்தீஸ்கரில் 10,310 தொற்றுகளும், கர்நாடகாவில் 6,976 பாதிப்புகளும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளன.

தொற்றுகளின் எண்ணிக்கை 12 மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. வாராந்திர தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம் 6.21 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கை 9,10,319 ஆக உள்ளது இதுவரை பதிவாகியுள்ள மொத்த பாதிப்புகளில் இது 7.04% ஆகும்

நாட்டில் இதுவரை குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,18,51,393 ஆக உள்ளது. தேசிய குணமடைதல் விகிதம் 91.67% ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் 59,258 பேர் குணமடைந்த நிலையில், 685 பேர் உயிரிழந்துள்ளனர்.

இறப்புகளில் 87.59 சதவீதம் 10 மாநிலங்களில் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 322 பேரும் சத்தீஸ்கரில் 62 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அசாம், லடாக், டையூ மற்றும் டாமன் & தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா, மணிப்பூர், லட்சத்தீவுகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய 12 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1710349

*****************(Release ID: 1710435) Visitor Counter : 251