பிரதமர் அலுவலகம்

டாக்டர்.ஹரேகிருஷ்ண மஹ்தப் எழுதிய ஒடிசா இதிகாசத்தின் இந்தி பதிப்பு: பிரதமர் ஏப்ரல் 9ம் தேதி வெளியிடுகிறார்

Posted On: 07 APR 2021 1:00PM by PIB Chennai

உத்கல் கேசரிடாக்டர்.ஹரேகிருஷ்ண மஹ்தப் எழுதிய ஒடிசா இதிகாசத்தின் இந்தி பதிப்பை, புதுதில்லி, ஜன்பத், அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடிஇம்மாதம் (2021 ஏப்ரல்) 9ம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியிடுகிறார்இந்தப் புத்தகம், இதுவரை ஒடியாவிலும், ஆங்கிலத்திலத்திலும் மட்டுமே கிடைத்தது. இதை திரு சங்கர்லால் புரோகித் என்பவர் இந்தியில் மொழிபெயர்த்துள்ளார். மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்,  கட்டாக்  மக்களவைத் தொகுதி உறுப்பினர் திரு பர்த்ருஹரி மஹ்தப் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்இந்தி பதிப்பு வெளியிடும் நிகழ்ச்சியை ஹரேகிருஷ்ண மஹ்தப் அறக்கட்டளை நடத்துகிறது.

ஆசிரியரைப் பற்றி

இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் டாக்டர்ஹரேகிருஷ்ண மஹ்தப்  குறிப்பிடத்தக்க நபராக இருந்தார். இவர் கடந்த 1946ம் ஆண்டு முதல் 1950ம் ஆண்டு வரையிலும், 1956ம் ஆண்டு முதல் 1961ம் ஆண்டு வரையிலும், ஒடிசா முதல்வராகப் பணியாற்றினார்இவர்ஒடிசா இதிகாசம்என்ற புத்தகத்தை, 1942 முதல் 1945ம் ஆண்டு வரையில், அகமத்நகர் கோட்டை சிறையில் இருந்தபோது எழுதினார்.

******(Release ID: 1710097) Visitor Counter : 176