பிரதமர் அலுவலகம்

2021, ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறும் ‘‘தேர்வுக்கு தயாராவோம்’’ நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்

Posted On: 05 APR 2021 10:46AM by PIB Chennai

2021 ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று காணொலி காட்சி மூலம் நடைபெறும் ‘‘தேர்வுக்கு தயாராவோம்’’ நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார்.

இது குறித்து சுட்டுரையில் தகவல் தெரிவித்துள்ள பிரதமர், ‘‘புதிய வடிவில், பரந்தளவிலான பாடங்கள் பற்றி பல சுவாரஸ்யமான கேள்விகள் மற்றும் தேர்வெழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன்  மறக்கமுடியாத விவாதம்.

 ஏப்ரல் 7 ஆம் தேதி மாலை 7 மணிக்குதேர்வுக்கு தயாராவோம்நிகழ்ச்சியை பாருங்கள்...

#PPC2021" என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

------(Release ID: 1709666) Visitor Counter : 16