மத்திய அமைச்சரவை
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைப்புடன் செயல்பட இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
16 MAR 2021 4:01PM by PIB Chennai
விளையாட்டு மற்றும் இளைஞர் தொடர்புடைய விஷயங்களில் ஒத்துழைப்புடன் செயல்பட மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் மாலத்தீவு விளையாட்டு மற்றும் சமுதாய மேம்பாட்டுத்துறை இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் கையெழுத்தானது.
நோக்கங்கள்:
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறையில் இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான இருதரப்பு பரிமாற்ற நிகழ்ச்சிகள், அறிவை விரிவு படுத்த உதவும் மற்றும் விளையாட்டு அறிவியல், விளையாட்டு மருத்துவம், பயிற்சி நுட்பங்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம், இளைஞர் விழாக்கள் மற்றும் முகாம்களில் பங்கேற்பு ஆகியவை சர்வதேச விளையாட்டு போட்டிகளில் நமது வீரர்களின் செயல் திறனை மேம்படுத்தும் மற்றும் இந்தியா -மாலத்தீவு இடையேயான இருதரப்பு உறவை வலுப்படுத்தும்.
பலன்கள்:
மாலத்தீவுடன் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு மூலம் ஏற்படும் பலன்கள் ஜாதி, மத. இன, மாநில பாகுபாடின்றி அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் சம அளவில் பொருந்தும்.
------
(Release ID: 1705158)
Visitor Counter : 182
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam