பிரதமர் அலுவலகம்

ராஜயோகினி தாதி ஹிர்தய் மோகினி ஜி மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 11 MAR 2021 6:57PM by PIB Chennai

ராஜயோகினி தாதி ஹிர்தய் மோகினி ஜி-யின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மனித குலத்தின் துன்பங்களை களைவதற்கும், சமூக மேம்பாட்டிற்கும் ராஜயோகினி தாதி ஹிர்தய் மோகினி ஜி எடுத்த பல்வேறு முயற்சிகளுக்காக அவர் நினைவு கூறப்படுவார். பிரம்ம குமாரிகள் குடும்பத்தின் நேர்மறை செய்தியை உலகெங்கும் பரப்புவதில் அவர் முக்கிய பங்காற்றினார். அவரது மறைவால் துயருற்றேன். ஓம் சாந்தி,” என்று தமது டிவிட்டர் பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.

*****************



(Release ID: 1704209) Visitor Counter : 135