பிரதமர் அலுவலகம்
மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் ஆண்டு விழாவை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
10 MAR 2021 10:58AM by PIB Chennai
மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் ஆண்டு விழாவை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
“ஆண்டு விழாவை முன்னிட்டு துணிச்சல் மிக்க மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் வாழ்த்துகள். நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சியை மேம்படுத்துவதில் அவர்களது பங்கு மிகவும் போற்றத்தக்கது. கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் ஆண்டு விழாவில் நான் கலந்துகொண்டேன். அப்போது நான் பேசியதை இங்கே காணவும்”, என்று பிரதமர் தமது சுட்டுரைச் செய்தியில் தெரிவித்து, கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் ஆண்டு விழாவில் அவரது உரையை இணைத்துள்ளார்.
*****************
(रिलीज़ आईडी: 1703778)
आगंतुक पटल : 190
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam