பிரதமர் அலுவலகம்
‘மக்கள் மருந்தக தின’ கொண்டாட்டங்களில் மார்ச் 7 அன்று பிரதமர் உரையாற்றவிருக்கிறார்
ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் 7500-வது மக்கள் மருந்தகத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
Posted On:
05 MAR 2021 8:36PM by PIB Chennai
‘மக்கள் மருந்தக தின’ கொண்டாட்டங்களில் மார்ச் 7 அன்று காலை 10 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றவிருக்கிறார்.
இந்நிகழ்ச்சியின் போது, ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் 7500-வது மக்கள் மருந்தகத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
பிரதமரின் இந்திய மக்கள் மருந்தக திட்ட பயனாளிகளுடன் உரையாடவுள்ள பிரதமர், பங்குதாரர்களின் சிறப்பான பணியை அங்கீகரித்து அவர்களுக்கு விருதுகளையும் வழங்கவுள்ளார்.
மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பிரதமரின் இந்திய மக்கள் மருந்தக திட்டம்:
தரமான மருந்துகளை குறைந்த விலையில் வழங்குவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கடைகளின் மொத்த எண்ணிக்கை 7499-ஐ தொட்டுள்ளது.
சந்தை விலையை விட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவான விலையில் இங்கு மருந்துகள் விற்கப்படுவதால், 2020-21 நிதி ஆண்டில் (2021 மார்ச் 4 வரை), ரூ. 3,600 கோடியை பொது மக்கள் சேமித்துள்ளனர்.
மக்கள் மருந்தக தினத்தை பற்றி:
மக்கள் மருந்தக திட்டம் குறித்து அதிக விழிப்புணர்வை உருவாக்குவதற்காக, மக்கள் மருந்தக வாரம் நாடு முழுவதும் மார்ச் 1 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது.
‘மக்கள் மருந்தகம்- சேவையும், வேலைவாய்ப்பும்’ என்பது இதன் மையக்கருவாகும்.
வாரத்தின் கடைசி தினமான மார்ச் 7 அன்று மக்கள் மருந்தக தினம் கொண்டாடப்படுகிறது.
*****************
(Release ID: 1702891)
Visitor Counter : 198
Read this release in:
Malayalam
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada