பிரதமர் அலுவலகம்
உள்கட்டமைப்பு துறையில் பட்ஜெட்டை சிறப்பாக செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கான இணைய கருத்தரங்கில் பிப்ரவரி 16 அன்று பிரதமர் உரையாற்றவிருக்கிறார்
प्रविष्टि तिथि:
15 FEB 2021 8:24PM by PIB Chennai
மத்திய பட்ஜெட் 2021-22-ஐ உள்கட்டமைப்பு துறையில் சிறப்பாக செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கான இணைய கருத்தரங்கில் 2021 பிப்ரவரி 16 அன்று மாலை 4 மணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றவிருக்கிறார்
இந்த இணைய கருத்தரங்கில் முன்னணி நிதி நிறுவனங்கள் மற்றும் நிதியங்கள், சலுகை பெறுவோர் & ஒப்பந்ததாரர்கள், ஆலோசகர்கள் மற்றும் துறை ரீதியான நிபுணர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கிறார்கள்.
முன்னேறிய தொழில்நுட்பத்தின் மீது கவனம் செலுத்தி உள்கட்டமைப்பு வளர்ச்சியின் வேகம் மற்றும் தரத்தை மேம்படுத்துவது மற்றும் துறைக்கு அதிகளவில் முதலீடுகளை ஈர்ப்பது குறித்த தங்களது எண்ணங்களை கருத்தரங்கில் உரையாற்றவிருப்போர் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து, பட்ஜெட் லட்சியத்தை விரைந்து நிறைவேற்றுவதற்கு, செயல்படுத்தவேண்டிய திட்டங்களின் பட்டியலை தயாரிப்பதற்கும், அதை செயல்படுத்துவதற்கான வழிமுறையை உருவாக்குவதற்கும், அமைச்சகக் குழுக்களின் மூத்த அதிகாரிகள் மற்றும் துறை ரீதியான நிபுணர்களின் இரு கூட்டங்கள் ஒரே சமயத்தில் நடைபெறும்.
இறுதிசெய்யப்பட்ட திட்டத்தின் செயல்படுத்தலுக்காக பங்குதாரர்களுடன் தொடர்ந்து ஆலோசிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
------
(रिलीज़ आईडी: 1698276)
आगंतुक पटल : 221
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam