பிரதமர் அலுவலகம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்ட கருத்துக்கள்

Posted On: 29 JAN 2021 11:12AM by PIB Chennai

நண்பர்களுக்கு நமஸ்காரம்,

இந்த தசாப்தத்தின் முதலாவது கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்துக்கு இந்த தசாப்தம் மிக முக்கியமானது. எனவே, சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை வேகமாக நிறைவேற்றுவதற்கான பொன்னான வாய்ப்பு நமக்கு இப்போது கிடைத்துள்ளது. இந்த தசாப்தத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே, ஒட்டுமொத்த தசாப்தத்தையும் மனதில் கொண்டு, பொருளுள்ள விளைவுகளை உருவாக்க வேண்டும் என்ற வகையில் கலந்தாடல்களும், கருத்துப் பரிமாற்றங்களும் நடைபெற வேண்டும். இதுதான் நாட்டின் எதிர்பார்ப்பாக உள்ளது.

          நம் அனைவரையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய மக்கள் நம் மீது நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயக மாண்புகளைப் பின்பற்றி, புனிதமான இந்த நாடாளுமன்றத்தில், வாய்ப்புகளை நல்ல முறையில்  முழுமையாகப் பயன்படுத்தி, மக்களின் உயர்விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான பங்களிப்பை செய்ய நமக்கு எந்தத் தடையும் இருக்கக் கூடாது. நாடாளுமன்றத்தின் இந்த கூட்டத்தொடர் அதிக பயனுள்ளதாக அமையும் வகையில் எம்.பி.க்கள் செயல்படுவார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.

இது பட்ஜெட் கூட்டத் தொடராகவும் உள்ளது. 2020 ஆம் ஆண்டில் தனித்தனி தொகுப்புத் திட்டங்களாக நான்கு அல்லது ஐந்து மினி பட்ஜெட்களை அளித்த பிறகு, நிதியமைச்சர் பட்ஜெட் சமர்ப்பிக்கும் வகையில், இந்திய வரலாற்றில் இந்தச் சூழல் முதல் முறையானதாக இருக்கும். அதாவது, 2020-ல் மின் பட்ஜெட்கள் ஒரு வகையில் தொடர்ந்தன. அந்த நான்கு ஐந்து பட்ஜெட்களின் தொடர்ச்சியாக இந்த பட்ஜெட் இருக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது.

மாண்புமிகு குடியரசுத் தலைவரின் வழிகாட்டுதலின் கீழ் அவருடைய அறிவிப்புகளை பலப்படுத்தநானும், நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களும் உறுதியுடன் செயல்படுவோம் என தெரிவித்துக் கொள்கிறேன்.

பல பல நன்றிகள்



(Release ID: 1693229) Visitor Counter : 178