பிரதமர் அலுவலகம்

துணை அதிபராக பதவியேற்றுள்ள திருமதி. கமலா ஹாரிசுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 21 JAN 2021 9:18AM by PIB Chennai

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் துணை அதிபராக பதவியேற்றுள்ள திருமதி. கமலா ஹாரிசுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் விடுத்துள்ள சுட்டுரைப் பதிவில், “துணை அதிபராக பதவியேற்றுள்ள திருமதி. கமலா ஹாரிசுக்கு வாழ்த்துகள். இந்திய-அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்த அவருடன் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்கி உள்ளேன். இந்திய-அமெரிக்க நட்புறவானது நமது புவிக்கு பலனளிக்கக் கூடியது” என்று தெரிவித்துள்ளார்.

 

***



(Release ID: 1690727) Visitor Counter : 123