சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் சிகிச்சையில் சாதனை: சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது

Posted On: 20 JAN 2021 12:34PM by PIB Chennai

கொவிட்- 19க்கு எதிரான போராட்டத்தில், இந்தியா இன்று  சாதனை படைத்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 2 லட்சத்துக்கும் கீழ் (1,97,201) குறைந்தது. இது மொத்த பாதிப்பில் 1.86 சதவீதம். இது 207 நாட்களுக்குப்பின் ஏற்பட்ட மிக குறைவான எண்ணிக்கை.  

கடந்த 24 மணி நேரத்தில் 16,988 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கையில் 3,327 பேர் குறைந்துள்ளனர்.

சிகிச்சை பெறுவர்களில் 72 சதவீதம் பேர், 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

ஜனவரி 20ம் தேதி காலை 7 மணி வரை, தமிழகத்தைச் சேர்ந்த 25,908 பேர் உட்பட  6,74,835  பயனாளிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 3,860 இடங்களில் நடந்த நிகழ்ச்சிகள் மூலம் 2,20,786 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 11,720 தடுப்பூசி போடும் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1.02 கோடி (1,02,45,741). சிகிச்சை பெறுபவர்களுக்கும், குணமடைந்தவர்களுக்குமான இடைவெளி இன்று 1,00,48,540 ஆக உள்ளது. குணமடைந்தோர் வீதம் 96.70 சதவீதமாக உள்ளது.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 4,516 பேரும், கேரளாவில் 4,296 பேரும், கர்நாடகாவில் 807 பேரும் குணமடைந்துள்ளனர்.

புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 79.2 சதவீதம் பேர் 7 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள்.

கேரளாவில் அதிகபட்சமாக 6,186 பேருக்கும், அடுத்ததாக மகாராஷ்டிராவில் 2,294 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

தினசரி உயிரிழப்பும், தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று உயிரிழப்பு எண்ணிக்கை 162 ஆக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690290

 

******

(Release ID: 1690290)


(Release ID: 1690366) Visitor Counter : 226