பிரதமர் அலுவலகம்

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 19 JAN 2021 1:46PM by PIB Chennai

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளது நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. வீரர்களின் அபார ஆற்றலையும், வேட்கையையும் போட்டி முழுவதிலும் காண முடிந்தது. அதே போன்று தான் அவர்களது வானளாவிய நோக்கமும், சிறப்பான மனஉறுதியும், எடுத்துக் கொண்ட தீர்மானமும். அணியினருக்கு பாராட்டுகள் ! உங்களது வருங்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்”, என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

************

 


(வெளியீட்டு அடையாள எண்: 1689972) வருகையாளர் எண்ணிக்கை : 196