சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களைவிட தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்வு

Posted On: 19 JAN 2021 11:29AM by PIB Chennai

பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முக்கிய மைல்கல்லைக் கடந்துள்ளது. அன்றாட புதிய பாதிப்புகள் இதுவரை இல்லாத அளவில் இன்று  மிகவும் குறைந்துள்ளன.

•           ஏழு மாதங்களுக்குப் பிறகு கடந்த 24 மணி நேரத்தில் 10,064 பேர்  நம் நாட்டில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 2020, ஜூன் 12-ஆம் தேதி புதிய பாதிப்புகள் 10,956 ஆக பதிவாகியிருந்தன.

•           இந்தியாவில் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு 2 இலட்சமாக (2,00,528) சரிந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் வெறும் 1.90 சதவீதமாகும்.

•           புதிய பாதிப்புகள் குறைந்து வரும் வேளையில், அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கொவிட்- 19க்கு எதிரான தடுப்பூசிகளை போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கையும் பெருவாரியாக அதிகரித்து வருகின்றது. தற்போது சிகிச்சை பெற்றுவருபவர்களின் மொத்த எண்ணிக்கையைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமானோர் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.

•           கடந்த 24 மணி நேரத்தில் 3930 அமர்வுகளில் 2,23,669 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 16,462 பேர் உட்பட நாட்டில் மொத்தம் 4,54,049 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் (இதுவரை நடைபெற்ற 7860 அமர்வுகளில்).

•           பரிசோதனை வசதிகள் அதிகரித்திருப்பதன் காரணமாக பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. இந்தியாவில் ஒரு வாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு 1.97 சதவீதமாக உள்ளது.

•           8 மாதங்களுக்குப் பிறகு கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 140 க்கும் குறைவாக (137) பதிவாகியுள்ளது.

•           நாட்டில் குணமடைந்தவர்களின் வீதம் 96.66 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 1,02,28,753 பேர் குணமடைந்துள்ள நிலையில், தற்போது 2,08,012 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

•           கடந்த 24 மணி நேரத்தில் 17,411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

•           கேரளாவில் அதிகபட்சமாக 3,921 பேர் ஒரே நாளில் புதிதாக குணமடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 3,854 பேரும், சட்டீஸ்கரில் 1,301 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்துள்ளனர்.

•           கேரளாவில் 3,346 பேரும், மகாராஷ்டிராவில் 1,924 பேரும், தமிழகத்தில் 551 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689895

-----


(Release ID: 1689969) Visitor Counter : 197