பிரதமர் அலுவலகம்

இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் வெற்றியாளர்கள் மற்றும் இறுதி குழுவினரை பிரதமர் பாராட்டினார்

இளம் சாதனையாளர்களின் பேச்சுக்களை தனது பக்கத்தில் டிவிட் செய்து கொண்டாடினார்

प्रविष्टि तिथि: 12 JAN 2021 10:00PM by PIB Chennai

இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் வெற்றியாளர்கள் மற்றும் இறுதிக் குழுவினரை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்இந்நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் பேசிய பிரதமர், ‘‘உங்களின் உரையாடலும், விவாதங்களும் மிக முக்கியமானவை. நீங்கள் பேசுவதை நான் கேட்டு கொண்டிருக்கும்போது, எனக்கு ஒரு யோசனை வந்தது. அதனால் உங்கள் பேச்சுக்களை எனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட முடிவு செய்தேன், 3 வெற்றியாளர்கள் மட்டும் அல்ல, பதிவு செய்யப்பட்ட பேச்சுக்கள் கிடைத்தால், இறுதி குழுவில் இருந்த அனைவரது பேச்சுக்களையும் நான் டிவிட் செய்வேன்.’’

பிரதமரின் டிவிட்டுகளை கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688086

 

******

 


(रिलीज़ आईडी: 1688230) आगंतुक पटल : 208
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam