பிரதமர் அலுவலகம்

பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா திட்டம் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு பயனாளிகளுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 13 JAN 2021 11:37AM by PIB Chennai

பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா திட்டம் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு அனைத்துப் பயனாளிகளுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்திகளில், “இயற்கை சீற்றங்களிலிருந்து கடும் உழைப்பாளிகளான விவசாயிகளைப் பாதுகாக்கும் முக்கிய முன்முயற்சியான  பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா திட்டம் இன்று ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்கிறதுபரப்பளவை அதிகரித்து, இடர்பாடுகளைக் களைந்து, கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் பயனளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ள அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்.

விவசாயிகள் அதிக பயனடைவதை பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா திட்டம் எவ்வாறு உறுதி செய்கிறது?

உரிமை கோரல்களை தீர்வு செய்வதில் வெளிப்படைத் தன்மையை எவ்வாறு ஏற்படுத்துகின்றது?

பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா திட்டத்துடன் தொடர்பான இது போன்ற அம்சங்களுக்கு நமோ செயலியில் உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள் என்னும் பகுதியில் புதுமையான வகையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது”, என்று தெரிவித்துள்ளார்.

***


(रिलीज़ आईडी: 1688217) आगंतुक पटल : 250
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam