சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

புதிய வகை கொரோனா வைரஸ் : இந்தியாவில் 71 பேருக்கு பாதிப்பு

प्रविष्टि तिथि: 06 JAN 2021 11:09AM by PIB Chennai
  1. இங்கிலாந்தில் ஏற்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவில் 71 பேருக்கு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது
  2. கொவிட் பாதிப்பால்  நாட்டில் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 12 நாட்களாக, உயிரிழப்போர் எண்ணிக்கை 300க்கும்  குறைவாகவே உள்ளது.
  3. கடந்த 7 நாட்களாக, 10 லட்சம் பேருக்கு ஒருவர் என்ற அளவிலேயே இந்தியாவில் கொவிட் இறப்பு எண்ணிக்கை உள்ளது.
  4. மற்றொரு சாதனையாக, கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து தற்போது 2,27,546 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 2.2 சதவீதம்.
  5. கடந்த 24 மணி நேரத்தில் 21,314 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 3,490 பேர் குறைந்துள்ளனர்.
  6. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 20,000க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 18,088 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  7. நாட்டில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியை (99,97,272)  நெருங்குகிறது. குணமடைந்தோர் வீதம் 96.36 சதவீதத்தை நெருங்குகிறது.
  8. கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 4,922 பேருக்கும், மகாராஷ்டிராவில் 2,828 பேருக்கும், சட்டீஸ்கரில் 1,651 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686445

******

(Release ID: 1686445)


(रिलीज़ आईडी: 1686510) आगंतुक पटल : 341
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Malayalam