சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோர் வீதம் 96 சதவீதத்தை கடந்தது : சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்தது

Posted On: 31 DEC 2020 10:54AM by PIB Chennai

கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியா குறிப்பிடத்தக்க இலக்கை கடந்தது.

தேசிய அளவில் குணமடைந்தோர் வீதம் 96 சதவீதத்தை (96.04%) தாண்டியுள்ளது. குணமடைந்தோர் வீதம் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 98.6 லட்சத்தை (98,60,280) கடந்தது. இது உலகளவில் மிக அதிகம்தற்போது சிகிச்சை பெறுபவர்களுக்கும், குணமடைந்தவர்களுக்குமான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து தற்போது 96,02,624 ஆக உள்ளது.

மற்றொரு சாதனையாக, கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,57,656-ஆக குறைந்துள்ளதுஇது மொத்த பாதிப்பில் 2.51 சதவீதம்.

கடந்த 24 மணி நேரத்தில் 21,822 பேருக்கு, புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 26,139 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கையில் 4,616 பேர் குறைந்துள்ளனர்

கடந்த 24 மணி நேரத்தில், 299 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684954

••••••••

(Release ID: 1684954)



(Release ID: 1685052) Visitor Counter : 173