தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
51வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான ஊடக பதிவு தொடக்கம் : ஆன்லைன் சேனல்களின் மூலமும் பங்கேற்கலாம்
Posted On:
30 DEC 2020 11:13AM by PIB Chennai
கோவாவில் 2021 ஜனவரி 16ம் தேதி முதல் -24ம் தேதி வரை நடைபெறும் 51வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐஎப்எப்ஐ) கலந்து கொள்ள விரும்பும் ஊடகவியலாளர்களுக்கான பதிவு தொடங்கியுள்ளது.
கோவிட்-19 தொற்று காரணமாக, 51வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கலப்பு முறையில் நேரடியாகவும், காணொலி காட்சி மூலமும் நடைபெறும்.
கோவிட்-19 தொடர்பான நெறிமுறைகளைப் பின்பற்றும் வகையில், கோவாவில் செய்தி சேகரிக்க நேரடியாக வரும் அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாக இருக்கும்.
இந்த விழாவில் நேரடியாக கலந்து கொள்ள விரும்பும் ஊடகவியலாளர்கள் இந்த இணைப்பில் பதிவு செய்யலாம்.
https://my.iffigoa.org/extranet/media/ .
விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்கு மேற்பட்டவராகவும் முக்கிய சர்வதேச திரைப்பட விழாக்களில் குறைந்தது 3 ஆண்டுகள் கலந்து கொண்ட அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். பத்திரிக்கை தகவல் அலுவலக முதன்மை தலைமை இயக்குர் அனுமதித்த விதிமுறைகளின்படி ஊடக அங்கீகாரம் வழங்கப்படும்.
இதற்கான பதிவு 2021, ஜனவரி 10ம் தேதி நள்ளிரவுடன் முடிவடைகிறது.
ஆன்லைன் மூலம் பங்கேற்பதற்கான வாய்ப்பு
ஐஎப்எப்ஐ தொடர்பான நிகழ்ச்சிகளில் காணொலி காட்சி மூலம் பங்கேற்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. பல திரைப்படங்கள் ஆன்லைன் மூலம் திரையிடப்படும்.
பத்திரிக்கை தகவல் அலுவலகம் நடத்தும் அனைத்து ஐஎப்எப்ஐ பத்திரிக்கையாளர் சந்திப்பும் பிஐபி-யின் யூடியூப் சேனலில் youtube.com/pibindia ஒளிபரப்பப்படும். நிருபர்கள் ஆன்லைன் மூலம் கேள்வி கேட்கும் வசதியும் உள்ளது.
ஆன்லைன் பங்கேற்பு குறித்த முழுமையான விவரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.
***********
(Release ID: 1684695)
Read this release in:
Marathi
,
Hindi
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Bengali
,
Manipuri
,
English
,
Urdu
,
Malayalam