பிரதமர் அலுவலகம்
அமைப்புகள் மற்றும் செயல்முறைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் ‘ஒரே பாரதம், உன்னத பாரதத்தை’ பிரதமர் விரிவாக்குகின்றார்.
தேசிய அளவிலான ஒருங்கிணைந்த சேவைகளில் ‘குறைந்தபட்ச அரசு-அதிகபட்ச நிர்வாகம்’ வெளிப்படுகிறது
Posted On:
28 DEC 2020 1:25PM by PIB Chennai
நாட்டின் ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்தை இன்று தொடங்கி வைத்தபோது, தேசிய பொது பயண அட்டையை, தில்லி மெட்ரோவின் விமான நிலைய விரைவு பாதைக்கும் நீட்டிக்கும் திட்டத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த பொது பயண அட்டை கடந்தாண்டு அகமதாபாத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த தொடக்கத்தின் போது, ‘குறைந்தபட்ச அரசு-அதிகபட்ச நிர்வாகம்’ என்ற தனது தாரக மந்திரத்தின் முக்கியமான அம்சத்தை நினைவூட்டினார். அதாவது அமைப்புகள் மற்றும் செயல்முறைகளை ஒருங்கிணைத்து அதன்மூலம் தனது ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற தொலைநோக்கை வலுப்படுத்த முடியும் என்றார்.
நவீனமயமாக்கலுக்கான அதே தரம் மற்றும் வசதிகளை வழங்குவது மிக முக்கியம் என பிரதமர் கூறினார். இந்த நோக்கில், தேசிய அளவிலான பொது பயண அட்டை முக்கியமான நடவடிக்கையாகும். பயணிகள் எங்கு சென்றாலும், எந்த பொது போக்குவரத்தை பயன்படுத்தினாலும், இந்த ஒரு அட்டை ஒருங்கிணைந்த சேவைகளை அளிக்கும்.
எளிதான வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, அனைத்து அமைப்புகள் மற்றும் செயல்முறைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. பொது பயண அட்டை ஒருங்கிணைப்பு முறை மூலம், நாட்டின் வலிமை திறம்பட ஒருங்கிணைக்கப்படுகிறது என பிரதமர் கூறினார். ‘‘ஒரே நாடு, ஒரே பயண அட்டை’’ மாதிரி, கடந்த காலங்களில் பல விஷயங்களை நமது அரசு ஒருங்கிணைத்துள்ளது’’ என திரு நரேந்திர மோடி கூறினார்.
ஒரே நாடு, ஒரே பாஸ்ட் டேக் என்பது நாடு முழுவதும் நெடுஞ்சாலை போக்குவரத்தை தடையில்லாமல் ஆக்கியுள்ளது. இது பயணிகளுக்கு தாமதம் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைத்துள்ளது. ஜிஎஸ்டி போன்ற ஒரே நாடு, ஒரே வரி என்ற முறை வரி அமைப்பில் உள்ள சிக்கலை முடிவுக்கு கொண்டு வந்து, மறைமுக வரியில் சீரான அமைப்பை கொண்டு வந்தது. ஒரே நாடு, ஒரே மின்தொகுப்பு என்ற அமைப்பு நாட்டின் அனைத்து பகுதிகளிலும், போதிய மற்றும் தொடர் மின்விநியோகத்தை உறுதி செய்கிறது. மின் இழப்பும் குறைந்துள்ளது.
ஒரே நாடு, ஒரே எரிவாயு விநியோகத் தொகுப்பு, முன்பு எரிவாயு பயன்பாடு கனவாக இருந்த பகுதிகளில், எரிவாயு அடிப்படையிலான வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை உறுதி செய்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் போன்ற ஒரே நாடு, ஒரே சுகாதார காப்பீடு திட்டம் மூலம் கோடிக்கணக்கான இந்திய மக்கள் எங்கு சென்றாலும் பயன் அடைகின்றனர். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு குடிபெயரும் மக்கள், ஒரே நாடு, ஒரே ரேசன் அட்டை திட்டம் மூலம், புதிய ரேசன் அட்டை பெறும் சிக்கலில் இருந்து விடுபட்டுள்ளனர். அதேபோல், புதிய வேளாண் சீர்திருத்தங்கள் மற்றும் இ-நாம் ஏற்பாடு மூலம் ஒரு நாடு, ஒரே வேளாண் சந்தை என்பதை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது.
*****************
(Release ID: 1684122)
Visitor Counter : 223
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam