சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட் 19 தடுப்பூசி வெளியிடுவதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது மத்திய அரசு : 4 மாநிலங்களில் அடுத்த வாரம் ஒத்திகை

Posted On: 25 DEC 2020 11:41AM by PIB Chennai

கோவிட் -19 தடுப்பூசிகளை வெளியிடுவதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுபவர்கள் பல்வேறு மாநிலங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர்

கோவிட்-19 தடுப்பூசி அறிமுகம் மற்றும் வெளியிடுவதற்கான, நமது மனித வளத்தின் திறனை வலுப்படுத்த, மருத்துவ அதிகாரிகள், தடுப்பூசி போடுபவர்கள், மாற்றுப் பணியாளர்கள்குளிர்ப் பதனக்கிடங்குகளை  கையாளுபவர்கள், மேற்பார்வையாளர்கள், தரவு மேலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வகை தடுப்பூசி கையாளுபவர்கள், ஆஷா ஒருங்கிணைப்பாளர்கள்  மற்றும் நிர்வாகிகளுக்கு விரிவான பயிற்சித் தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி போடும் நிகழ்ச்சிகளை நடத்துதல்முழு தடுப்பூசி செயல்முறையை நிர்வகிப்பதற்கான தகவல் தொழில்நுட்ப  தளத்தைப் பயன்படுத்துதல், பணியாளர்களை நியமித்தல்குளிர்ப் பதனக் கிடங்குகளின்  தயார் நிலை, பாதகமான நிகழ்வுகளின் மேலாண்மை, தகவல் தொடர்பு மற்றும்  ஒருங்கிணைப்பு, உயிரி மருத்துவக் கழிவு  மேலாண்மை, தொற்றுத் தடுப்பு நெறிமுறைகள் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.  

 

தேசிய அளவிலான பயிற்சியில், மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் 2,360 பேர்  பயிற்சி பெற்றுள்ளனர்தற்போது வரை, அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில்  மாநில அளவிலான பயிற்சிகள் முடிவடைந்துள்ளன. இவற்றில் மாவட்ட அளவில் 7,000க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றுள்ளனர்லட்சத்தீவில் இந்த பயிற்சி டிசம்பர் 29ஆம் தேதி நடக்கிறது.  681 மாவட்டங்கள் (49,604 பயிற்சியாளர்கள்) செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் மருத்துவ அதிகாரிகளின் பயிற்சியை முடித்துள்ளன.  17,831 வட்டாரங்களில் 1399 வட்டாரங்களில், தடுப்பூசி போடும் குழுவினருக்கான பயிற்சிகள் முடிவடைந்துள்ளன. மற்ற வட்டாரங்களில் பயிற்சிகள் நடந்து வருகின்றன.

கோவிட்-19 தடுப்பூசி மற்றும் கோ-வின்  இணையதளம்  தொடர்பான சந்தேகங்களைத்  தீர்க்க வசதியாக, தேசிய அளவில் 1075 மற்றும் மாநில  அளவில் 104 உதவி எண்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தயார் நிலை நடவடிக்கையாக, ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்கங்ளில் ஒத்திகை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும், இரண்டு மாவட்டங்களில் உள்ள அரசுத்துறை மற்றும் தனியார் துறை மருத்துவமனைகளில் இந்த ஒத்திகை மேற்கொள்ளத் திட்டமிடப்படும். இது கோவிட்-19 தடுப்பூசி போடும் முறையைப் பரிசோதிக்க உதவும். இது நிகழ்ச்சி ஏற்பாடு செய்பவர்களுக்கு, நல்ல அனுபவத்தையும் வழங்கும். டிசம்பர் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் இந்த ஒத்திகை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1683529&RegID=3&LID=1

----



(Release ID: 1683594) Visitor Counter : 229