சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாட்டில் 2.81 லட்சம் பேர் கோவிட் சிகிச்சை பெறுகின்றனர்: 0.97 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்
Posted On:
25 DEC 2020 11:35AM by PIB Chennai
நாட்டில் 2.81 லட்சம் பேர் கோவிட் சிகிச்சை பெறுகின்றனர். இவர்கள் மொத்த பாதிப்பில் 2.78 சதவீதமாக உள்ளனர்.
தினசரி பாதிப்பை விட, தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருவதால், நாட்டில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,81,919-ஆக உள்ளது.
கடந்த 28 நாட்களாக, தினசரி குணமடைபவர்கள் எண்ணிக்கை, தினசரி பாதிப்பை விட அதிகமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 24,661 பேர் குணமடைந்துள்ளனர், 23,067 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் 1,930 பேர் குறைந்துள்ளனர்.
ஒரு மில்லியன் பேருக்கு இந்தியாவில் பாதிப்பு 7,352 ஆக உள்ளது. இது உலகளவில் குறைந்த அளவு. ஒரு மில்லியன் பேருக்கு உலக சராசரி 9,931 ஆக உள்ளது.
நாட்டில் குணமடைவோர் வீதம் இன்று 95.77 சதவீமாக உள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 0.97 கோடி ( 97,17,834) ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 336 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1683528&RegID=3&LID=1
-----
(Release ID: 1683589)
Visitor Counter : 127
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam