சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
                
                
                
                
                
                
                    
                    
                        நாட்டில் கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்திற்கும் கீழ் குறைவு
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                22 DEC 2020 11:54AM by PIB Chennai
                
                
                
                
                
                
                கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது.
163 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்திற்கும் கீழ் (2,92,518) குறைந்து, 2.90%ஆக பதிவாகியுள்ளது. கடந்த ஜூலை 12-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 2,92,258 ஆக இருந்தது.
இதேபோல் 173 நாட்களுக்குப் பிறகு ஒரு நாளின் பாதிப்பு 20,000-கும் கீழ் (19,556) குறைந்துள்ளது.  கடந்த ஜூலை 2-ஆம் தேதி ஒரு நாளின் பாதிப்பு 19,148 ஆக இருந்தது.
இந்தியாவில் ஒரு மில்லியன் மக்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலகளவில் குறைவாக (219) உள்ளது. அமெரிக்கா, இத்தாலி, பிரேசில், துருக்கி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.
நாட்டில் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96 லட்சத்தைக் கடந்து  96,36,487 ஆக (95.65%) பதிவாகியுள்ளது. குணமடைந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து, தற்போது 93,43,969 ஆக உள்ளது.
தொடர்ந்து 25-வது நாளாக புதிதாக நோய் தொற்று ஏற்பட்டவர்களை விட  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 30,376 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 301 பேர் உயிரிழந்துள்ளனர். 
குணமடைந்தவர்களில் 75.31 சதவீதத்தினரும், புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 75.69 சதவீதத்தினரும், உயிரிழந்தவர்களில் 76.74 சதவீதத்தினரும் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். 
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682600
***************** 
                
                
                
                
                
                (Release ID: 1682678)
                Visitor Counter : 198
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam