சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3.09 சதவீதம்
प्रविष्टि तिथि:
19 DEC 2020 11:17AM by PIB Chennai
இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து, தற்போது 3.09 சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக நோய்த் தொற்று ஏற்பட்டு குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துள்ளது. இந்தத் தொடர் நிலையால் இந்தியாவில் தற்போது 3,08,751 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 25,152 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,885-ஆக பதிவாகியுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் இந்தியாவில் பத்து லட்சம் மக்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலக அளவில் குறைவாக (223) உள்ளது.
கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மற்றொரு மைல்கல் சாதனையாக நாட்டின் மொத்தப் பரிசோதனையின் எண்ணிக்கை 16 கோடியைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11 லட்சத்து 70 ஆயிரத்து 868 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 16,00,90,514-ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் ஒரு நாளில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை 15 லட்சமாக அதிகரித்துள்ளது. பரிசோதனையின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. தற்போது மொத்த பாதிப்பு 6.25 சதவீதமாக உள்ளது.
15 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் தேசிய அளவை விட குறைவாகவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் மொத்தம் 95.5 லட்சம் (95,50,712) பேர் குணமடைந்துள்ளனர். உலக அளவில் மிக அதிகமாக குணமடைந்தவரின் வீதம் 95.46-ஆக பதிவாகியுள்ளது. தற்போது 92,41,961 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
34 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் குணமடைந்தவரின் வீதம் 90 சதவிகிதத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 347 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681921
**********************
(रिलीज़ आईडी: 1681992)
आगंतुक पटल : 254
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam