பிரதமர் அலுவலகம்

குஜராத்தில் முக்கிய திட்டங்களை பிரதமர் திறந்து வைத்தார்


மாறி வரும் காலத்துக்கு ஏற்ப உலக அளவில் சிறந்த நடைமுறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்-பிரதமர்

விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டுள்ள நாங்கள், அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன், தொடர்ந்து உறுதியளித்து வருகிறோம்-பிரதமர்

புதிய யுகத்தின் தொழில்நுட்பம் மற்றும் புதுயுக பொருளாதாரத்துடன் கட்ச் பிரதேசம் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது- பிரதமர்

Posted On: 15 DEC 2020 3:22PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று குஜராத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைத்தார். கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், வீரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா, முற்றிலும் தானியங்கி பால் பதப்படுத்துதல் மற்றும் கலன்களில் நிரப்பும் நிலையம் உள்ளிட்டவை இவற்றுள் அடங்கும். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் உடனிருந்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், கால மாற்றத்துக்கு ஏற்ப உலக அளவில் சிறந்த நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்று கூறினார். இந்த விஷயத்தில் கட்ச் பிரதேசத்தின் விவசாயிகளை அவர் பாராட்டினார். அவர்கள் தற்போது, பழங்களை வெளிநாடுகளுக்கு  ஏற்றுமதி செய்கின்றனர். நமது விவசாயிகளின் புதுமையான வழிகள் மீதான ஆர்வத்தை இது காட்டுகிறது என அவர் கூறினார். அரசின் குறைந்தபட்ச தலையீட்டின் காரணமாக, கடந்த இருபது ஆண்டுகளாக, வேளாண்மை, பால்பண்ணை தொழில், மீன் வளம் ஆகிய துறைகளில் குஜராத் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாக அவர் கூறினார். விவசாயிகளையும், கூட்டுறவு சங்கங்களையும் அதிகாரப்படுத்தியதை குஜராத் செய்துள்ளது.

வேளாண் சீர்திருத்தங்கள் குறித்து தவறான தகவல்களைக் கூறி விவசாயிகள் திசை திருப்பப்படுவதாக பிரதமர் குறை கூறினார். விவசாய சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் பல ஆண்டுகளாக கோரி வந்தவையே, விவசாய சீர்திருத்தங்களாக தற்போது வடிவம் பெற்றுள்ளன என அவர் குறிப்பிட்டார். மத்திய அரசு எப்போதும் விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்தி வருவதாகவும், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

புதுயுக தொழில்நுட்பம் மற்றும் புதுயுக பொருளாதாரத்தின் மூலம் கட்ச் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். கெரேராவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா, மாண்ட்வியில் கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம், அஞ்சாரில் உள்ள சார்ஹத் தெஹ்ரியில் புதிய தானியங்கி நிலையம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கட்ச் பகுதியின் வளர்ச்சி பயணத்தில் புதிய மைல்கற்களை இவை உருவாக்கப் போகிறது. இந்தத் திட்டங்களின் பயன்கள் இந்தப் பிராந்தியத்தின் பழங்குடியினர், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்களுக்கு போய்ச்சேரும் என்று அவர் கூறினார். இன்று கட்ச் நாட்டிலேயே வெகு வேகமாக வளரும் பிராந்தியங்களில் ஒன்றாக உள்ளது என அவர் குறிப்பிட்டார். இங்குள்ள இணைப்பு வசதிகள் நாளுக்கு நாள் சிறப்படைந்து வருகிறது.

குஜராத் மக்கள் இரவு உணவின் போது மின்சாரம் இருக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வைத்த காலம்  ஒன்று இருந்ததை  பிரதமர் சுட்டிக்காட்டினார். குஜராத்தில் இன்று பெரும் மாற்றம் ஏறுபட்டுள்ளது என அவர் கூறினார். இன்றைய குஜராத் இளைஞர்கள், முந்தைய வசதியற்ற நாட்கள் பற்றி அறிந்திருக்கவில்லை என அவர் கூறினார். கட்ச் பகுதி மக்கள் தொகை எதிர்மறை வளர்ச்சியை கண்டிருந்ததை அவர் நினைவு கூர்ந்தார். இன்று, மக்கள் வெளியில் செல்வதை நிறுத்தி விட்டனர். வெளியில் சென்றவர்கள் திரும்பி வருவதால், மக்கள் தொகை பெருகி வருகிறது. பயங்கர நிலநடுக்கத்திற்கு பின்னர் கட்ச் பகுதி அடைந்துள்ள நான்கு மடங்கு வளர்ச்சி குறித்து, ஆராய்ச்சியாளர்களும், பல்கலைக்கழகங்களும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

குஜராத் அரசு கடந்த இருபது ஆண்டுகளில், விவசாயிகளுக்கு உகந்த பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் புகழ்ந்துரைத்தார். சூரிய சக்தி திறனை வலுப்படுத்துவது குறித்த பணியில் குஜராத் முன்னோடி மாநிலமாக திகழ்ந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

21-ம் நூற்றாண்டில், எரிசக்தி பாதுகாப்பும், நீர் பாதுகாப்பும் மிகவும் முக்கியமானவை என பிரதமர் குறிப்பிட்டார். தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க கட்ச் பகுதிக்கு நர்மதை தண்ணீரைக் கொண்டு வருவது பற்றி முந்தைய காலங்களில் கேலி பேசியவர்கள் உண்டு என அவர் கூறினார். இன்று நர்மதை தண்ணீர் கட்சை வந்தடைந்துள்ளது, கட்ச் முன்னேறி வருகிறது  என அவர் தெரிவித்தார்.

                                                                                          ***



(Release ID: 1680834) Visitor Counter : 178