சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

5 மாதங்களுக்குப் பின், தினசரி கொவிட் பாதிப்பு 27 ஆயிரத்துக்கும் குறைந்தது

Posted On: 08 DEC 2020 11:55AM by PIB Chennai

கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியா குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்துக்கும் கீழ் (26,567)  குறைந்தது. இது கடந்த 5 மாதங்களில் மிகக் குறைவு. கடந்த ஜூலை 10ம் தேதி, தினசரி தொற்று பாதிப்பு 26,506 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு சாதனையாக, நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும், இன்று 4 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தது.

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3.83 லட்சமாக (3,83,866) குறைந்தது. இது மொத்த பாதிப்பில் 3.96 சதவீதம்.

கடந்த 24 மணி நேரத்தில் 39,045 பேர் குணமடைந்துள்ளனர்இதன் மூலம் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் 12,863 பேர் குறைந்தனர்.

புதிய பாதிப்பை விட, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், குணமடைந்தோர் சதவீதம் 94.59 சதவீதமாக உள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91,78,946 ஆக உள்ளது.

தினசரி கொவிட் உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 385 பேர்  உயிரிழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679019

••••••

(Release ID: 1679019)


(Release ID: 1679063) Visitor Counter : 257