பிரதமர் அலுவலகம்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடுக்குமாடி வீடுகளை பிரதமர் திறந்து வைத்தார்
17-வது மக்களவை ஏற்கெனவே பல வரலாற்று முடிவுகளை எடுத்துள்ளது
Posted On:
23 NOV 2020 11:54AM by PIB Chennai
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடுக்குமாடி வீடுகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று திறந்து வைத்தார். புதுதில்லி டாக்டர் பி.டி. மார்க்கில் இந்த அடுக்குமாடி வீடுகள் அமைந்துள்ளன. 80 ஆண்டுகளும் மேல் பழமையான எட்டு பங்களாக்கள் இருந்த இடத்தில் 76 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியின் போது பேசிய பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இந்த அடுக்குமாடிவீடுகளில் பசுமை கட்டிட வளாகத்துக்கான விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாகத்
தெரிவித்தார். இந்தப் புதிய அடுக்குமாடி வீடுகள், குடியிருப்புவாசிகள் மற்றும் எம்.பி.க்களுக்குப் பாதுகாப்பும், ஆரோக்கியமும் தருவதாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தங்குமிட வசதி அளிப்பது நீண்டகால பிரச்சினையாக இருந்து வந்த நிலையில், இப்போது அதற்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். பல தசாப்தங்களாக இருக்கும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதால் அவை
முடிவுக்கு வந்துவிடாது, தீர்வு காண்பதால் தான் முடிவுக்கு வரும் என்று அவர் கூறினார். பல ஆண்டுகளாக டெல்லியில் பூர்த்தி செய்யப்படாத இதுபோன்ற பல திட்டங்களை இந்த அரசு
செயல்படுத்தி, உரிய கால அவகாசத்திற்குள் முடித்துள்ளது என்று அவர்
பட்டியலிட்டார்.
அம்பேத்கர் தேசிய நினைவிடம் கட்டுவது குறித்து அட்டல் பிகாரி வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது ஆலோசனைகள் தொடங்கிய நிலையில், 23 ஆண்டுகள் கழித்து இந்த அரசால் அது கட்டி முடிக்கப் பட்டுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார். மத்திய தகவல்
ஆணையத்திற்கான கட்டடம், இந்தியா கேட் அருகே போர் நினைவுச் சின்னம், தேசிய காவல் துறை நினைவிடம் ஆகியவை நீண்டகாலம் நிலுவையில் இருந்த நிலையில், இந்த அரசால் பூர்த்தி செய்யப்பட்டன என்று அவர் கூறினார்.
நாடாளுமன்ற செயல்பாடுகளில் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைப்பு அளித்த அனைத்து உறுப்பினர்களுக்கும், இப்போது புதிய வசதி கிடைத்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆக்கபூர்வமாக, விதிமுறைகளின்படி நடைபெறுவதில் மக்களவைத் தலைவர் துடிப்புடன் செயல்பட்டதாக பிரதமர் புகழ்ந்தார். பெருந்தொற்று பரவிய காலத்திலும், புதிய விதிமுறைகள் மற்றும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி நாடாளுமன்ற செயல்பாடுகள் தொடர்ந்து நடந்தது குறித்து பிரதமர் மகிழ்ச்சி
தெரிவித்தார். மழைக்கால கூட்டத் தொடர் நல்லபடியாக நடப்பதை உறுதி செய்ய வார இறுதி நாட்களிலும் இரு அவைகளும் செயல்பட்டதை அவர் குறிப்பிட்டார்.
இளைஞர்களுக்கு 16 முதல் 18 வரையிலான வயது முக்கிய காலக்கட்டமாக இருக்கிறது என்று கூறிய அவர், நாம் 16-வது மக்களவை பதவிக் காலத்தை 2019-ல் நிறைவு செய்தோம் என்றும்,
இந்த காலகட்டம் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு வரலாற்று முக்கியத்துவமானதாக உள்ளது என்றும் கூறினார். 17-வது மக்களவையின் பதவிக்காலம் 2019-ல் தொடங்கியது என்றும், இந்த காலகட்டத்தில் இந்த மக்களவையில் ஏற்கெனவே
எடுக்கப்பட்ட முடிவுகள் வரலாற்று முக்கியத்துவமானவையாக இருக்கின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். நாட்டை புதிய தசாப்த காலத்திற்கு அழைத்துச் செல்வதில் அடுத்த (18-வது)
மக்களவையும் மிக முக்கியமான பங்களிப்பை செய்யும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
**********
(Release ID: 1675074)
Visitor Counter : 229
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam