பிரதமர் அலுவலகம்

உத்தரப் பிரதேசத்தின் கிராமப்புற குடிதண்ணீர் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

Posted On: 20 NOV 2020 2:12PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாவட்டத்தின் விந்தியாச்சல் பகுதியில் உள்ள மிர்சாப்பூர், சோன்பத்ரா மாவட்டங்களுக்கான ஊரக குடிதண்ணீர் விநியோகத் திட்டங்களுக்கு, இம்மாதம் 22 அன்று (22.11.20) காலை 11.30 மணிக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். இந்நிகழ்ச்சியின் போது, கிராம தண்ணீர் மற்றும் சுகாதாரக் குழுவின் உறுப்பினர்களோடு பிரதமர் உரையாடுகிறார். உத்தரப் பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

2,995 கிராமங்களில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் தண்ணீர் இணைப்பு அளிக்கவுள்ள இத்திட்டத்தின் மூலம் சுமார் 42 லட்சம் பேர் பயனடைவர். இத்திட்டத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்காக கிராம தண்ணீர் மற்றும் சுகாதாரக் குழுக்கள் அனைத்து கிராமங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களுக்காக ரூ 5,555.38 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 24 மாதங்களுக்குள் இவற்றின் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜல் ஜீவன் திட்டத்தைப் பற்றி 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி செங்கோட்டையிலிருந்து பிரதமரால் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், 2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் செயல்படும் தண்ணீர் குழாய் இணைப்பை வழங்குவதை லட்சியமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் அறிவிக்கப்பட்ட போது, நாட்டிலிருந்த 18.93 கோடி ஊரக வீடுகளில் வெறும் 3.23 கோடி வீடுகளில் மட்டுமே (17 சதவீதம்) குழாய் இணைப்பு இருந்தது. அதாவது, 15.70 கோடி வீடுகளில் இணைப்பு தரவேண்டியிருந்தது. கடந்த 15 மாதங்களில், கொவிட்-19 பெருந்தொற்றுக்கு இடையிலும், 2.63 கோடி வீடுகளுக்கு குழாய் தண்ணீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள காரணத்தால், தற்போது சுமார் 5.86 கோடி (30.67 சதவீதம்) ஊரக வீடுகளில் குழாய் இணைப்புகள் உள்ளன.

------



(Release ID: 1674367) Visitor Counter : 136