பிரதமர் அலுவலகம்

உலக கழிப்பறை தினம் : அனைவருக்கும் கழிப்பறை என்ற தனது உறுதியை இந்தியா வலுப்படுத்துகிறது - பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2020 1:41PM by PIB Chennai

உலக கழிப்பறை தினமான இன்று, அனைவருக்கும் கழிப்பறை என்ற தனது உறுதியை நாடு வலுப்படுத்துகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

"உலக கழிப்பறை தினத்தில், அனைவருக்கும் கழிப்பறை என்ற தனது உறுதியை இந்தியா வலுப்படுத்துகிறது. கடந்த சில வருடங்களில் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சுத்தமான கழிப்பறைகளை வழங்கும் ஈடில்லா சாதனை செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம், குறிப்பாக பெண்களுக்கு, சுகாதார நன்மைகள் அளிக்கப்பட்டிருப்பதோடு, அவர்களின் கண்ணியமும் காக்கப்பட்டிருக்கிறது," என்று தனது டிவிட்டர் பதிவொன்றில் பிரதமர் கூறியுள்ளார்.

•••••


(வெளியீட்டு அடையாள எண்: 1674026) வருகையாளர் எண்ணிக்கை : 243