பிரதமர் அலுவலகம்

தாவ் ஆங் சான் சு கியீ மற்றும் என்எல்டி தேர்தல் வெற்றிக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 12 NOV 2020 10:38PM by PIB Chennai

மியான்மர் தேர்தலில் வெற்றி பெற்ற தாவ் ஆங் சான் சு கியீ மற்றும் என்எல்டி-க்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் தமது டுவிட்டர் பதிவில், ‘’ தேர்தலில் பெற்ற வெற்றிக்காக  தாவ் ஆங் சான் சு கியீ மற்றும் என்எல்டி-க்கு வாழ்த்துக்கள். வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்திருப்பது, மியான்மரில் நடைபெறும் ஜனநாயக  மாற்றத்தில் மற்றொரு படியாகும். நமது பாரம்பரிய நட்புறவை வலுப்படுத்த, தங்களுடன் தொடர்ந்து பணியாற்றுவதை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்’’, என்று கூறியுள்ளார்.


(Release ID: 1672570) Visitor Counter : 137