பிரதமர் அலுவலகம்

பஹ்ரைன் பிரதமர் மேதகு இளவரசர் திரு கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபாவின் மறைவிற்கு‌ பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 11 NOV 2020 7:17PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, பஹ்ரைன் பிரதமர் மேதகு இளவரசர் திரு கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபாவின் மறைவிற்கு‌ இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

பஹ்ரைன் பிரதமர் மேதகு இளவரசர் திரு கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபாவின் மறைவிற்கு‌ எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயர நேரத்தில் பஹ்ரைன் அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அந்நாட்டு மக்களுக்காக பிரார்த்தித்துக் கொள்கிறோம்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

-----

 


(வெளியீட்டு அடையாள எண்: 1672048) வருகையாளர் எண்ணிக்கை : 160