பிரதமர் அலுவலகம்

அகமதாபாத்தின் கேவடியாவில் இருந்து சபர்மதி ஆற்றுப்படுகை வரையிலான கடல்-விமான சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார்

Posted On: 31 OCT 2020 2:25PM by PIB Chennai

கேவடியாவில் உள்ள நீர் விமான நிலையம் மற்றும் கேவடியாவில் உள்ள ஒற்றுமை சிலையையும் அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றுப் படுகையையும் இணைக்கும் வகையிலான கடல்-விமான சேவையை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

மேலும் அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றுப்படுகையில் உள்ள நீர் விமான நிலையம் மற்றும் அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றுப் படுகையையும், கேவடியாவில் உள்ள ஒற்றுமை சிலையையும் இணைக்கும் வகையிலான கடல்-விமான சேவையை பிரதமர் தொடங்கிவைத்தார். இறுதிகட்ட இணைப்பாக நீர் விமான நிலையங்களை அமைக்கும் தொடர் திட்டங்களின் கீழ் இவை அமைக்கப்பட்டுள்ளன.

விமான ஓடுதளம் அல்லது ஓடு பாதை இல்லாத இடங்களில் உபயோகப்படுத்தும் வகையில் தண்ணீரிலிருந்து மேல் எழும் மற்றும் கீழே இறங்கும் வசதிகள் இந்த கடல் விமானங்களில் உள்ளது. இதன்மூலம் கரடுமுரடான சவாலான பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளை பிரதான விமான சேவைகளுடன் இணைக்கும் வகையிலும், விமான நிலையங்கள் மற்றும் ஓடுதளம் அமைக்கத் தேவைப்படும் செலவைக் குறைக்கும் வகையிலும் இந்த புதிய கடல்-விமான சேவை உதவிகரமாக இருக்கும். ஏரிகள், உப்பங்கழிகள், அணைகள் போன்ற நீர்நிலைகள், சரளைக் கற்கள், மற்றும் புற்களில் தரை இறங்கும் வசதி கொண்ட இந்த சிறிய இறகுகள் கொண்ட விமானங்களின் வாயிலாக பல்வேறு சுற்றுலா தலங்களையும் எளிதில் சென்று அடையலாம்.

-----



(Release ID: 1669105) Visitor Counter : 265