மத்திய அமைச்சரவை
இந்தியாவின் ஐசிஏஐ மற்றும் பப்புவா நியூ கினியாவின் சிபிஏ ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
21 OCT 2020 3:25PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவின் ஐசிஏஐ மற்றும் பப்புவா நியூ கினியாவின் சிபிஏ ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனமான ஐசிஏஐ மற்றும் பப்புவா நியூ கினியாவின் சான்றளிக்கப்பட்ட பணியில் உள்ள கணக்காளர்கள் நிறுவனமான சிபிஏ ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் மூலம், பப்புவா நியூ கினியாவில் திறன் வளர்த்தல் மற்றும் கணக்கு, நிதி மற்றும் தணிக்கை ஆகியவற்றில் அறிவுசார் அடிப்படையை வலுவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
துறை சார்ந்த தொழில்நுட்ப நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் ஆகியவற்றையும் இரு நிறுவனங்கள் இணைந்து நடத்தும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பரஸ்பரம் மாற்றிக்கொள்ளும் நிகழ்வுகளும் நடைபெறும்.
பெரு நிறுவன ஆளுகை, தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் அறிவுரை, தர உறுதிப்படுத்துதல், தடயவியல் கணக்குகள் மற்றும் பரஸ்பர விருப்பமுள்ள இதர துறைகளிலும் இணைந்து செயல்படுவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666382
---
(Release ID: 1666407)
Visitor Counter : 180
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada