சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

உலகிலேயே 10 லட்சம் மக்கள் தொகையில் குறைவான இறப்புகளை காணும் நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து உள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 16 OCT 2020 2:18PM by PIB Chennai

கொவிட்-19 காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளில், உலகிலேயே 10 லட்சம் மக்கள் தொகையில் குறைவான இறப்புகளை காணும் நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து உள்ளது. இன்று இந்த எண்ணிக்கை 81 ஆக உள்ளது.

அக்டோபர் 2 முதல் கடந்த 14 நாட்களாக 1,100-க்கும் குறைவான உயிரிழப்புகளே இந்தியாவில் நிகழ்ந்துள்ளன. 22 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் தேசிய சராசரியை விட குறைவான இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

கொவிட் மேலாண்மை மற்றும் பதிலடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் மட்டுமில்லாமல், இறப்புகளின் எண்ணிக்கையை குறைப்பதிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 70,338 நபர்கள் குணமடைந்த நிலையில், 63,371 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 64,53,779 ஆகும்.

குணமடைந்தோர் மற்றும் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களுக்கு இடையேயான இடைவெளி 56 லட்சத்தை (56,49,251) கடந்துள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களை விட குணமடைந்தோரின் விகிதம் 8 மடங்கு அதிகமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665087

**********************


(வெளியீட்டு அடையாள எண்: 1665115) வருகையாளர் எண்ணிக்கை : 306
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam