நிதி அமைச்சகம்

ரூ 68,825 கோடியை கடனாக பெற 20 மாநிலங்களுக்கு அனுமதி

Posted On: 13 OCT 2020 6:28PM by PIB Chennai

திறந்தவெளி சந்தை கடன்களின் மூலம் கூடுதல் நிதியாக ரூ 68,825 கோடியை பெற்றுக் கொள்ள 20 மாநிலங்களுக்கு நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை அனுமதி அளித்துள்ளது.

 

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி முறை அமல்படுத்தப்பட்டதன் மூலம் எழுந்த பற்றாக்குறையை சமாளிப்பதற்கு நிதி அமைச்சகம் பரிந்துரைத்த இரண்டு வழிகளில் முதலாவதை தேர்ந்தெடுத்த மாநிலங்களுக்கு அவற்றின் மொத்த மாநில உற்பத்தியில் 0.50 சதவீதம் அளவுக்கு கூடுதல் கடனாக பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

2020 ஆகஸ்ட் 27 அன்று நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரி குழுவின் கூட்டத்தில் இந்த இரண்டு விருப்பத்தேர்வுகள் முன்மொழியப்பட்டு, இது குறித்து 2020 ஆகஸ்ட் 29 அன்று மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

 

இருபது மாநிலங்கள் முதலாம் விருப்பத் தேர்வுக்கு இசைவை தெரிவித்துள்ளன. அவை: ஆந்திரப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம், அசாம், பிகார், கோவா, குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஒடிஷா, சிக்கிம், திரிபுரா, உத்திரப் பிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் ஆகும். எட்டு மாநிலங்கள் தங்களது முடிவை இன்னும் தெரிவிக்கவில்லை.

 

 

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664054

******

(Release ID: 1664054)



(Release ID: 1664245) Visitor Counter : 249