சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தொடர்ந்து 2வது நாளாக, கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழ் உள்ளது
Posted On:
10 OCT 2020 11:18AM by PIB Chennai
இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒரு மாதத்துக்குப்பின் தொடர்ந்து 2வது நாளாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்துக்குள் கீழ் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 8,83,185-ஆக பதிவாகியுள்ளது.
நாட்டின் மொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 12.65%வீதமாக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 1/8 பங்கு.
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 60 லட்சத்தை (59,88,822) நெருங்குகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், 82,753 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் 73,272 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டில் குணமடைந்தோர் வீதம் 85.81%-ஆக அதிகரித்துள்ளது.
குணமடைந்தவர்களில் 76% பேர் 10 மாநிலங்கள் / யூனியன் பிரசேங்களைச் சேர்ந்தவர்கள்.
மகாராஷ்டிராவில் அதிக அளவாக ஒரே நாளில் 17 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 73,272 பேருக்க புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 926 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 82% பேர் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் மட்டும் 32%-க்கும் அதிகமானோர் அதாவது 302 பேர் உயிரிழந்துள்ளனர்.
---
(Release ID: 1663375)
Visitor Counter : 203
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam