பிரதமர் அலுவலகம்

கனடாவில் நடைபெறும் ‘இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்’ என்ற கருத்தரங்கில் பிரதமர் இன்று மாலை உரையாற்றுகிறார்

Posted On: 08 OCT 2020 11:32AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி,இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்என்ற தலைப்பில் கனடாவில் நடைபெறும் கருத்தரங்கில் இன்று மாலை 6.30 மணிக்கு உரையாற்றுகிறார்.

இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளைத் தெரிவிப்பதும், முதலீடு செய்வதற்கு இந்தியா ஏற்ற நாடு என்பதை கனடாவில் உள்ள தொழில் அதிபர்களிடம் எடுத்துக் கூறுவதும்  ‘இன்வெஸ்ட் இந்தியாஅமைப்பின் நோக்கமாகும்.

இந்தக் கருத்தரங்கில் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உற்பத்தித் துறை நிறுவனங்கள், ஆலோசனை நிறுவனங்கள் மற்றும்  பல்கலைக்கழகங்களைச்   சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

******(Release ID: 1662671) Visitor Counter : 162