குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பிரபல பின்னணி திரைப்பட பாடகர் திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் இரங்கல்
प्रविष्टि तिथि:
25 SEP 2020 2:16PM by PIB Chennai
பிரபல பின்னணி திரைப்பட பாடகர் திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் அறிக்கை
‘‘ எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் சோகமான மறைவை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். அவரை நான் பல தசாப்தங்களாக அறிவேன். இது உண்மையிலேய, இசை உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு ஆழமான உணர்ச்சி தருணம். ரசிகர்களால் எஸ்பிபி அல்லது பாலு என அன்பாக அழைக்கப்பட்ட அவர், எனது சொந்த ஊரான நெல்லூரைச் சேர்ந்தவர். அவரது மெல்லிசை பாடல்களை கேட்டுள்ளதாலும், தாய்மொழி மீது அவருக்கு இருந்த பற்றாலும், ஒரு தலைமுறை முழுவதும் திறமையான இளம் இசை கலைஞர்களை அவர் வளர்த்துள்ளதாலும், அவர் மீது எனக்கு மிகுந்த அபிமானம் உண்டு.
எனது இதயத்திலும், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இசைப் பிரியர்களின் மனங்களிலும் அவர் வெற்றிடத்தை ஏற்படுத்தி சென்றுள்ளார். அவரது மெல்லிய குரல், துரதிர்ஷ்டவசமாக தீய வைரஸால் முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது புன்னகையும், நகைச்சுவையும் நம் நினைவுகளில் பொதிந்திருக்கும். அவரது அசாதாரணமான பாடல்கள், நம் காதுகளில் தொடர்ந்து ஒலிக்கும் மற்றும் வரவிருக்கும் மிக நீண்ட காலத்திற்கு நம் உணர்வில் எதிரொலிக்கும்.
நான் நெருக்கமாக அறிந்த பிரபல இசைகலைஞருக்கு, நான் மரியாதை செலுத்துகிறேன். எதிர்பாராத இழப்பை தாங்கி கொள்ளும் பலத்தை, அவரது குடும்பத்துக்கு இறைவன் வழங்க வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்’’.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1658959
******
(रिलीज़ आईडी: 1658976)
आगंतुक पटल : 366
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam